• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னைக்கு ரெட் அலர்ட்... மிக கனமழை எச்சரிக்கை

சென்னைக்கு ரெட் அலர்ட்... மிக கனமழை எச்சரிக்கை

ரெட் அலர்ட் எச்சரிக்கை

ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 7.30 மணிவரையில் சென்னையில் 207 மி.மீ. மழை பெய்துள்ளது.  நந்தனம் ஒ.எம்.சி.ஏ. பகுதியில் 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

  • Share this:
    சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து வருகிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடாமல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில், இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சாலையில்  நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் உட்புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

    இந்நிலையில், சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 7.30 மணிவரையில் சென்னையில் 207 மி.மீ. மழை பெய்துள்ளது.  நந்தனம் ஒ.எம்.சி.ஏ. பகுதியில் 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் குட் வில் பள்ளி அருகே 191 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இதையும் படிங்க: சென்னை மழை: 2015ம் ஆண்டுக்கு பின்னர் இதுதான் அதிகம்- தமிழ்நாடு வெதர்மேன்


    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,  திருச்சி, புதுக்கோட்டை,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை,  சிவகங்கை, கன்னியாகுமரி,  திருநெல்வேலி,  தென்காசி, தூத்துக்குடி,  ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: