• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: நவம்பர் 10ம் தேதி அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: நவம்பர் 10ம் தேதி அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு!

அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு

அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு

நவம்பர் 10ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (Red alert) விடுத்துள்ளது. அன்றைய தினம் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Share this:
    நவம்பர் 10ம் தேதி தமிழகத்தில் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அன்றைய தினம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த இருதினங்களாக பரவலாக மழைபெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முந்தினம் முதல் நேற்று காலை வரையிலான நேரத்தில் 200 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. தமிழகத்தில் மழை தொடரும் நிலையில், தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே இது தொடர்பாக ஏ.என்.ஐ. ஊடகத்துக்கு பேட்டியளித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மிருத்யுஞ்ஜய் மஹாபாத்ரா,கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகியுள்ளது. இன்று தீவிரம் சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். வங்காள விரிகுடாவில் 9-ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 11-ம் தேதி காலை வட தமிழக கடலோரப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று தெரிவித்தார்.

    இதனால் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகம், தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்த அவர், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி பயணிக்கும் போது வரும் மழையின் அளவு 12ம் தேதி குறையும். மீனவர்கள் 9ம் தேதிக்குள் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.



    ரெட் அலர்ட் எச்சரிக்கை:

    இதனிடையே, நவம்பர் 10ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (Red alert) விடுத்துள்ளது. அன்றைய தினம் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆந்திரா, ஏனாம் பகுதிகளிலும் அதி தீவிர  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை தொடரும்; 10ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: