ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மெல்ல நெருங்கும் மாண்டஸ் புயல்.. தமிழகத்திற்கு நாளை ரெட் அலெர்ட்... வானிலை மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

மெல்ல நெருங்கும் மாண்டஸ் புயல்.. தமிழகத்திற்கு நாளை ரெட் அலெர்ட்... வானிலை மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

ரெட் அலெர்ட்

ரெட் அலெர்ட்

Cyclone Mandous | மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புயல் காரணமாக நாளை தமிழகத்திற்கு அதிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பத்தாம் தேதி ஆரஞ்சு நிற அலர்ட் அதாவது மிக கனமழை எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது , காரைக்காலுக்கு தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி வரும் நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see... நெருங்கும் மாண்டஸ்.. புயல் கரையை கடக்கும் நேரத்தில் கவனத்தில் இருக்க வேண்டிய விஷயங்கள்!

இதன் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Cyclone Mandous, Heavy Rainfall, Weather News in Tamil