தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்..

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்..
கோப்பு படம்
  • Share this:
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதி கன மழையும், கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும், உள் தமிழகத்தில் மிதமான மழையும் பெய்ய கூடும் என்றும்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 34 சென்டி மீட்டர் மழையும், பந்தலூரில் 19 சென்டிமீட்டர் மழையும் அவலாஞ்சியில் 11 சென்டி மீட்டர் மழையும், நடு வட்டம் மற்றும் கூடலூர் பஜார் பகுதியில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை

அடுத்த 5 நாட்களுக்கு மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகள், மஹாராஷ்டிரா குஜராத் உள்ளிட்ட கடலோர பகுதிகளில்காற்று 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க...தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு... என்னென்ன இயங்கும்? இயங்காது?

மேலும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உயர் கடலலைகள் 3.5 - 4.4 மீட்டர் வரை எழும்பக்கூடும்.‌ இதன் காரணமாகவும் மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading