Home /News /tamil-nadu /

சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

மழை வெள்ளம்

மழை வெள்ளம்

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறத

    குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

    இலங்கை அருகே உள்ள அந்த காற்று சுழற்சி, வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வருவதாலும், வங்கக் கடல் பரப்பில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வருவதாலும், தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக ஆந்திராவின் நெல்லூர் முதல் தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் வரை மழை நேற்று முழுவதும் பெய்தது.

    அதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

    இந்நிலையில், அந்த காற்று சுழற்சி 30ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் தமிழகத்தில் மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று, கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை மற்றும் மிக கனமழை பெய்யும். அதனால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

    மேலும் கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். 28ம் தேதியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழையும் பெய்யும்.

    இது தவிர அரியலூர், திருச்சி, கருர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Heavy rain, Red Alert, Weather News in Tamil

    அடுத்த செய்தி