• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரெட் அலெர்ட் : செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் கூடுதல் உபரிநீர் திறப்பு

ரெட் அலெர்ட் : செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் கூடுதல் உபரிநீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுளள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் கூடுதலாக உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

  • Share this:
    தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நவம்பர் 18ம் தேதி அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் இதனால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதனிடையே தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியதால் கடந்த 7 ம் தேதி உபரி நீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக மழை இல்லாத காரணத்தால் உபரி நீர் திறப்பு 250 கனஅடியாக குறைக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட உயரம் 21.33 அடியாகவும், நீர்வரத்து 405 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 2934 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

    தற்போது உபரி நீர் திறப்பு 1500 கன அடியாக உயர்த்தப்பட்டது. மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்தடுத்து இரண்டு உருவாகி உள்ள காரணத்தாலும் நாளைய தினம் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்டால் கூடுதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் உபரி நீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வெளியேற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்

    மேலும் புழல் ஏரியில் 2 ஆயிரம் கனஅடி வீதம் வினாடிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வினாடிக்கு 5,146 கன அடி நீர்வரத்து வருவதால் கொசஸ்தலை ஆற்றில் தற்போது 7007 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: