திமுக அரசு அமைந்த பிறகு ரூ.641 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை

ஸ்ரீரங்கம் கோவில் - திருச்சி

திமுக அரசு அமைந்த பிறகு, ரூ.641 கோடி மதிப்பிலான, ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு அந்தந்த திருக்கோயிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பு பேரவையில் கொடுக்கப்பட்டது. அதில், இந்து சமய அறநிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனிப்பட்ட நபர்களின் பெயரில் தவறாகப் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதை மீட்க மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தனியார் பெயரில் தவறுதலாக பட்டா மாறுதல் செய்யப்பட்ட 60 கோவில்களுக்கு சொந்தமான 301.44 ஏக்கர் நிலங்கள், திருக்கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  மேலும், இந்து சமய நிறுவனங்களின் மிகப் பெரும் நிலவளங்களை சிறப்பாக நிர்வகிக்கவும், தனியார் பெயரில் தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலங்களை கண்டறிந்து மீட்டெடுக்கவும் வருவாய்த் துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்றவும் தொகுப்பூதிய அடிப்படையில் 8 ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்கள், 20 ஓய்வுபெற்ற வட்டாட்சியர்கள், 17 ஓய்வுபெற்ற நில அளவையர்கள், 3 ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் 9 ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

  Also read: எதிர்க்கட்சித் தலைவரை விவாதத்திற்கு அழைத்த முதல்வர் - கராசார விவாதத்தை, முடித்து வைத்த சபாநாயகர்!

  திமுக அரசு அமைந்த பிறகு, ரூ.641 கோடி மதிப்பிலான, 203 ஏக்கர் அளவிலான வேளாண் நிலங்களும், 170 கிரவுண்டு அளவிலான காலி மனைகளும், 1.8 கிரவுண்டு கட்டடங்களும், 15.5 கிரவுண்டு அளவிலான கோவில் குளக்கரை பகுதிகளும் மீட்கப்பட்டு அந்த திருக்கோயிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: