ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் போலி என்ஐஏ அதிகாரிகள் கொள்ளையடித்த ரூ. 1.65 கோடி மீட்பு

சென்னையில் போலி என்ஐஏ அதிகாரிகள் கொள்ளையடித்த ரூ. 1.65 கோடி மீட்பு

பணம் மீட்பு

பணம் மீட்பு

சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து 2 கோடிக்கு மேல் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மண்ணடி அருகே உள்ள முத்தையால்பேட்டையை சேர்ந்த முகமது அப்துல்லா என்பவர், பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். கடந்த 13ம் தேதி இவரது வீட்டுக்கு வந்த கும்பல், தாங்கள் என்ஐஏ அதிகாரிகள் என்று கூறினர். பின்னர், அவரின் வீடு மற்றும் செல்போன் கடையில் சோதனை என்ற பெயரில் ரூ.2.30 கோடி மற்றும் செல்போன், லேப்-டாப் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர்.ஆனால், தான் ஏமாந்ததை அறிந்த முகமது அப்துல்லா முத்தையால்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19ம் தேதி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில், பாஜக பிரமுகர் வேங்கை அமரன் உட்பட 6 பேர் சரண் அடைந்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் பேரில், ராயபுரத்தை சேர்ந்த சித்திக், பைசல் உட்பட மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இதுவரை மொத்தம் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இந்த பணம் முத்தையால்பேட்டை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், கைப்பற்றப்பட்ட பணத்தை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


First published:

Tags: Chennai, Robbery