ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய இருந்த தொன்மையான சாமி சிலைகள் மீட்பு

ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய இருந்த தொன்மையான சாமி சிலைகள் மீட்பு

சிலைகள் மீட்பு

சிலைகள் மீட்பு

அதிகாலை 4 மணி அளவில் மேல்மருவத்தூர் சித்தாமூர் சந்திப்பு அருகே சிலை மீட்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மேல்மருவத்தூர் அருகே ஒரு கோடி மதிப்புடைய தொன்மையான உலோக மீனாட்சி அம்மன் சிலை மற்றும் ரிஷப தேவர் சிலை மீட்டு சிலை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்படைப்பப்பட்டது. 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் ஐஜி ஜெயந்த்முரளி, உத்தரவுப்படி சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஐஜி தினகரன் வழிகாட்டலுடன் கண்காணிப்பாளர் பொன்னி மேற்பார்வையில் கூடுதல் துணை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் ஆய்வாளர் இந்திரா, உதவி ஆய்வாளர்கள் தியாகராஜன், பாலச்சந்தர் மற்றும் தலைமை காவலர் முரளி, பிரபாகரன், பாண்டியராஜன், முருகவேல் அடங்கிய சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து.

இந்த ரகசிய தகவலின் படி அதிகாலை 4 மணி அளவில் மேல்மருவத்தூர் சித்தாமூர் சந்திப்பு அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில்  வந்த நபரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், அவரிடம் தொன்மையான மீனாட்சி அம்மன் உலோக சிலை இருந்ததை கண்டுபிடித்து மீட்டனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிலையை ஏழு பேர் கொண்ட கும்பல் சுமார் ரூ. ஒரு கோடிக்கு விற்க முயற்சி மேற்கொண்டதும்  தெரியவந்தது.

மேலும் பொய்கையாற்றில் மணலில் மற்றொரு சிலை புதைத்து வைத்திருப்பதாக அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, அங்கு சென்று தொன்மையான ரிஷப தேவர் சிலையை, சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டனர்.

இந்த தொன்மையான சிலைகளை விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுச் செயல்பட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கார்த்திக் (29 ), மூர்த்தி (33), சுந்தரமூர்த்தி (25), குமரன் (30), அசோக் (33), அறிவரசு (43), அப்துல் ரகுமான் (24) ஆகிய ஏழு பேரையும்  இரவு கூடுதல் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்ற நீதிபதி  பாண்டி மகாராஜா முன்பு ஆஜர்படுத்தினர்.

Must Read : கேரளாவில் கரைபுரண்டோடும் ஆற்று வெள்ளத்தில் சரிந்துவிழும் முழு வீடு- பதறவைக்கும் வீடியோ

மேலும் கைப்பற்றப்பட்ட இரண்டு சிலைகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Published by:Suresh V
First published:

Tags: Ancient statues