HOME»NEWS»TAMIL-NADU»recommendation to take action under the gundas law who are in touch with masinagudi elephant fire incident srs

காட்டு யானைக்கு தீ வைத்தவர்களை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை

மாவனல்லாவை சேர்ந்த ரேயாண்ட் டீன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யபட்டனர். தலைமறைவாக உள்ள ரிக்கி ரயனை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காட்டு யானைக்கு தீ வைத்தவர்களை  குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை
காட்டு யானைக்கு தீவைத்த இருவர் கைது
  • Share this:

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில், காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவத்தில், மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மசினகுடி பகுதிக்கு உணவு தேடி வந்த யானையின் மீது, சாக்குப்பையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, அதனை யானையின் மீது மூன்று பேர் வீசியுள்ளனர். இதில் யானையின் காதில் தீப்பற்றி எரியும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதுதொடர்பாக மாவனல்லாவை சேர்ந்த ரேயாண்ட் டீன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யபட்டனர். தலைமறைவாக உள்ள ரிக்கி ரயனை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில் மூன்று பேர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யபடுள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கௌசல் தெரிவித்தார். வீடியோ பதிவை ஆராய்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யபடுவார்கள் எனவும் கெளசல் தெரிவித்தார்.
Published by:Ram Sankar
First published: