ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

6 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகளை திறக்க பரிந்துரை - முதல்வரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை தாக்கல்

6 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகளை திறக்க பரிந்துரை - முதல்வரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை தாக்கல்

மாதிரி படம்

மாதிரி படம்

6 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகளைத் திறந்து 2 வாரத்துக்குப் பிறகு அதன் விளைவுகளை பொறுத்து 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்.1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 14ம் தேதி ஆலோசனை நடத்தினார். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் 14ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.

சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற சிலர் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளை திறக்கலாம் என்று தெரிவித்துள்னர்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அளித்த கருத்துக்களையும் தொகுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

அதில், 6 முதல் 8 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என அதில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாம்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், வரும் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நடைபெறவுள்ள ஊரடங்கு ஆலோசனையில் பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tn schools