Home /News /tamil-nadu /

மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல் - நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் வாதம்!

மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல் - நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் வாதம்!

மதுபாட்டில்கள்

மதுபாட்டில்கள்

Tasmac : டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
    டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதில் பல்வேறு சிக்கல் உள்ளதாக நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கடமை தமிழ்நாடு அரசிற்கு உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தது.

    நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தியதையும், 29 லட்சம் மதுபாட்டில்கள் விற்கப்பட்டு, அதில் 18 லட்சம் மதுபாட்டில்களை திரும்ப பெறப்பட்டதையும் சுட்டிக்காட்டி, திட்டத்தை வகுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.

    மலைப்பகுதிகளில் 7 அல்லது 8 கடைகள் மட்டுமே இருக்கும் என்பதால் அங்கு இத்திட்டத்தை அமல்படுத்துவது எளிது ஆனால் இதை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது கடினம் என  சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

    பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்த அரசின் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது.

    மேலும் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Alcohol consumption, Chennai High court, Tasmac

    அடுத்த செய்தி