ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரையில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: 6 மாதத்தில் 48 திருமணம் நிறுத்தம்

மதுரையில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: 6 மாதத்தில் 48 திருமணம் நிறுத்தம்

பண கொடுத்தல் : மேட்ரிமோனியல் வரன் தேடும்போது இணயவழியில் பணம் கேட்கும் நபர்கள் உங்களை அணுகினால், அதனை உடனடியாக தவிர்த்து விட வேண்டும். வரன் தேடுபவர்களுக்கு தேவையற்ற ஆசைகளைக் காட்டி இதுபோன்ற இணையக் கொள்ளையில் ஈடுபடுபவர்களும் உண்டு. அவர்களின் வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

பண கொடுத்தல் : மேட்ரிமோனியல் வரன் தேடும்போது இணயவழியில் பணம் கேட்கும் நபர்கள் உங்களை அணுகினால், அதனை உடனடியாக தவிர்த்து விட வேண்டும். வரன் தேடுபவர்களுக்கு தேவையற்ற ஆசைகளைக் காட்டி இதுபோன்ற இணையக் கொள்ளையில் ஈடுபடுபவர்களும் உண்டு. அவர்களின் வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

மதுரையில் சமீப காலங்களாக குழந்தைத் திருமணம் அதிகரித்துவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரை மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் 48 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 192 குழந்தை திருமணங்கள் தடுத்த நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 35 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டத்தில் சமீப காலங்களாக குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 48 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தாமதமான புகார்களினால் 13 திருமணங்கள் நடந்தேறியுள்ளது.

மேலும், கடந்த 2019ம் ஆண்டில் 84 திருமணங்களும், 2020ம் ஆண்டில் 60 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக மாவட்ட குழந்தை திருமண தடுப்பு அலுவலகத்திற்கு 227 புகார்கள் வந்ததை தொடர்ந்து, 192 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதில், 35 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய கொரோனோ பொதுமுடக்க காலத்தில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதாகவும் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை திருமணம் தொடர்பாக அதிக புகார் வருவதாக குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளை வீட்டில் உள்ள முதியோரின் கண்காணிப்பில் விட்டுவிட்டு வெளி மாநிலங்களுக்கு பணிக்காக செல்லும் குடும்பத்தை சேர்ந்தோர் இளம் வயதில் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முன்வருவதாகவும் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து குழந்தை திருமணத்திற்கு எதிராக  பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் குழந்தை திருமணம் குறித்த புகார்களை 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Published by:Karthick S
First published:

Tags: Child marriage, Madurai