• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘டாஸ்மாக்’ மது விற்பனைக்கு ரசீது கட்டாயம் : கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை

‘டாஸ்மாக்’ மது விற்பனைக்கு ரசீது கட்டாயம் : கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மொத்தமாக மதுவகைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை.

  • Share this:
    ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க, ரசீது வழங்க வேண்டும் என்று கூறி மேலாண்மை இயக்குனர் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், அனைத்து மண்டல சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    ‘டாஸ்மாக்’ கடைகளில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு அதிகபட்ச விற்பனை விலையை காட்டிலும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருவதாக மதுபிரியர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். எனவே மதுகடைகள் முன்பு விலைபட்டியல் வைக்கப்பட வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தாலும், ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் அதனை பொருட்படுத்துவது இல்லை என குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்நிலையில், கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் இல.சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், அனைத்து மண்டல சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ‘ஏற்கனவே அறிவுறுத்தியபடி ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில்படும்படி விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும்.

    மது விற்பனைக்கு பற்றுச்சீட்டு ரசீது பில் புத்தகம் மூலம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனை கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது துறைரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட மற்றொரு சுற்றறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் வழக்கு ஒன்றில் ‘டாஸ்மாக்’ கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் ஊழியர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Must Read : பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை... ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு கிடைப்பதில் சிக்கல்

    இது குறித்து மாவட்ட மேலாளர்கள் ‘டாஸ்மாக்’ ஊழியர்களிடம் விளக்கமாக தெரிவித்து அவர்களின் சான்றொப்பம் பெற வேண்டும். மொத்தமாக மதுவகைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: