Home /News /tamil-nadu /

அதிக சர்க்கரை.. சுவாச குழாயில் தொற்று.. மாரடைப்பு.. ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் என்ன? - முழு ரிப்போர்ட்

அதிக சர்க்கரை.. சுவாச குழாயில் தொற்று.. மாரடைப்பு.. ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் என்ன? - முழு ரிப்போர்ட்

ஜெயலலிதா

ஜெயலலிதா

Jayalalithaa Death : ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பாக திராட்சை பழம், கேக், இனிப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டுள்ளதாக அவரது குடும்ப மருத்துவர் சிவக்குமார்  வாக்குமூலம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது பற்றிய முழு அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவ குழு ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்தது.

    மருத்துவமனையில் அனுமதி

    ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 5 நாட்கள் முன்பாகவே காய்ச்சல் மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் இருந்துள்ளது. இந்நிலையில், 22 செப்டம்பர் 2016 இரவு 10 மணிக்கு அவரது உடல்நிலை மோசமானது. அப்போது மூளையின் செயல்திறன் குறைந்து ஆக்சிஜன் அளவு 48%, நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 88 என்ற அளவிலும், ரத்த அழுத்தம் 140/70 என்ற அளவிலும், ரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாகவும் இருந்துள்ளது.

    இந்நிலையில் அவர், அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மூச்சுத்திணறல் இருந்ததால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இன்சுலின் மருந்துகள் செலுத்தப்பட்டது. மேலும் இதய துடிப்பை கட்டுப்படுத்த பேஸ்மேக்கரும் பொருத்தப்பட்டது. 

    இதனையடுத்து செப்டம்பர் 28ஆம் தேதி அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் சீரானது. அப்போது அவருக்கு பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட்டு அது பலன் அளித்துள்ளது.

    ஜெயலலிதா


    சுவாசக்குழாயில் தொற்று

    பாக்டீரியா பாதிப்பால் அவரது சுவாசக்குழாயில் தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது. டிசம்பர் 4ஆம் தேதியன்று அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அன்றைய நாளிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

    சி.பி.அர் சிகிச்சையை தொடர்ந்து 24 மணி நேரம் எக்மோ சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு, மூளை மற்றும் இதயம் செயலிழந்து அவர் உயிரிழந்தார்.

    ஜெயலலிதா


    மரணத்திற்கான காரணம்

    ஜெயலலிதாவிற்கு இருந்த கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவையால் ஏற்பட்ட இருதய செயலிழப்பே மரணத்திற்கு காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பாகவே ஜெயலலிதாவிற்கு சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், தலைசுற்றல், தைராய்டு, மரபுவழி தோல் அழற்சி, குடல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நரம்பு தளர்ச்சி போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் இருந்துள்ளது.

    இனிப்புகள் சாப்பிட்டு வந்த ஜெயலலிதா

    இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பாக திராட்சை பழம், கேக், இனிப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டுள்ளதாக அவரது குடும்ப மருத்துவர் சிவக்குமார்  வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

     
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Apollo hospital, Arumugasamy commission, Jayalalitha

    அடுத்த செய்தி