• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Book Fair | சென்னை புத்தக கண்காட்சியில் திராவிட தலைவர்கள் முதல் மாஸ்டர் விஜய் வரை தத்ரூப சிலைகள் விற்பனை

Chennai Book Fair | சென்னை புத்தக கண்காட்சியில் திராவிட தலைவர்கள் முதல் மாஸ்டர் விஜய் வரை தத்ரூப சிலைகள் விற்பனை

Youtube Video

சென்னை புத்தக கண்காட்சியில், திராவிட இயக்கத் தலைவர்கள் தொடங்கி மாஸ்டர் விஜய் வரை தத்ரூபமான சிலைகள் வைக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

  • Share this:
    புத்தக வாசிப்பாளர்களை மகிழ்விக்கும் வகையில், கடந்த 24ம் தேதி சென்னை 44வது புத்தக கண்காட்சி தொடங்கியது. தமிழகத்தின் பிரமாண்ட புத்தக கண்காட்சியான இதில், 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 15 லட்சம் தலைப்புகளில் ஏராளமான புத்தகங்களுடன் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் வரும் மார்ச் 9-ம்தேதி வரை நடைபெறுகிறது. கதை, இலக்கியம், வரலாறு, புதினம், சிறுகதை, மொழிபெயர்ப்பு நூல்கள், என வாசகர்களின் அறிவு பசிக்கு தீனிபோடும் வகையில் அமைந்துள்ள இந்தக் கண்காட்சியில், புத்தகங்கள் மட்டுமின்றி திராவிட இயக்கத் தலைவர்கள் முதல் மாஸ்டர் விஜய் வரையில் பலரின் தத்ரூபமான சிலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களின் உருவங்கள், அசோக சின்னம் போன்ற வடிவமைப்பில் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் படிக்க... லாக்கை உடைக்காமல் ஸ்ப்ளெண்டர் பைக்குகளை குறிவைத்து திருடியவர் கைது

    அதேபோல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் போன்றோரின் கை அடக்க சிலைகளை ஆர்வத்துடன் வாசகர்கள் வாங்கி செல்கின்றனர். சிலையின் வடிவமைப்பு மற்றும் உயரத்திற்கு ஏற்ப இரண்டாயிரம் ரூபாய் முதல் சிலைகள் விற்பனை செய்யப்படுவதாக அரங்கின் சிலை விற்பனையாளர் செளமியா தெரிவித்தார்.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: