Home /News /tamil-nadu /

Exclusive : இபிஎஸ் உடன் இணைந்து பணியாற்ற தயார் - ஓ.பன்னீர்செல்வம் சூசகம்

Exclusive : இபிஎஸ் உடன் இணைந்து பணியாற்ற தயார் - ஓ.பன்னீர்செல்வம் சூசகம்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னிர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பன்னிர்செல்வம் ஒருங்கிணைபாளர் என்ற பழைய நிலையே தொடரும் என தீர்ப்பளித்தது. தீர்ப்பு ஓ.பி.எஸ்ற்கு சாதகமாக வந்ததால் அவரின் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் கொண்டாடினர்.

    இதை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று ஓபிஎஸ் மரியதை செலுத்தினார். இதனிடைய நியூஸ்18 தொலைக்காட்சி செய்தியாளருக்கு பேட்டியளியளித்த அவர், இந்த தீர்ப்பு குறித்து, “இது மிகவும் நல்ல தீர்ப்பு.. தொண்டர்களுக்கான தீர்ப்பு” என தெரிவித்தார். மேலும் கட்சி இனி எப்படி செயல்பட போகிறது என்ற கேள்விக்கு, “தொண்டர்களின் ஆதரவோடும், தமிழக மக்களின் அரவனைப்போடும் நாங்கள் தொடர்ந்து நடத்துவோம்” என கூறினார்.



    தொடர்ந்து எடப்பாடியோடு சேர்ந்து பணியாற்ற தாயாரா என்ற கேள்விக்கு, “23-06-2022ற்கு முன் யார் எல்லாம் கட்சியின் பொறுப்பில் இருந்தார்களோ அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற தயார்” என பதிலளித்தார். மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் உங்களை ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் சென்றார்.

    இந்நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: ADMK, Chennai High court, OPS

    அடுத்த செய்தி