• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • EXCLUSIVE: சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்

EXCLUSIVE: சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்

Youtube Video

தமிழகத்தை உலுக்கிய சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழக்கவில்லை என்று உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.

  • Share this:
5 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி ராம்குமார் உயிரிழக்கவில்லை என்று தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஸ்வாதி கொலை.. ராம்குமார் கைது.. ராம்குமார் தற்கொலை முயற்சி.. ராம்குமார் தற்கொலை.. இப்படி பல திருப்பங்களையும் முரண்களையும் கொண்ட வழக்கில் இப்போது கிடைத்துள்ள புதிய ஆதாரங்கள் ஒட்டு மொத்த கதையையும் புரட்டிப்போட்டுள்ளது.

ராம்குமார் வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் முன்பு ஆஜரான மருத்துவர் வேணு ஆனந்தும், மருத்துவர் ஆண்டாளும் கொடுத்த வாக்குமூலம் இந்த வழக்கு முடிக்கப்பட்ட விதத்தை அசைத்துப் பார்த்துள்ளது.

மூளை, இதயம், நுரையீரல், நாக்கு, கல்லீரல், மண்ணீரல், மேல் உதடு, கீழ் உதடு, சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் திசுக்களை ஹிஸ்டோபேத்தாலஜி நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

ஆய்வின் இறுதியில், ராம்குமாரின் திசுக்களை ஆய்வு செய்ததில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என ஹிஸ்டோபேத்தாலஜி (Histopathology) நிபுணர்கள் வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளனர்.

வழக்கமாக மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார் என்றால், அவரது மூளை, இதயம் ஆகிய உறுப்புகளின் திசுக்களில் பாதிப்பு பதிவாகியிருக்கும்.

ஆனால், ராம்குமாரின் திசுக்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அப்படி எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை தடயவியல் ஆய்வின் இறுதியில் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ராம்குமாரின் மரணத்தில் இன்னோர் திருப்பம் உடலில் இருந்த காயங்கள்.. மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களில் 12 காயங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கிறார்கள் மூத்த தடயவியல் நிபுணர் சம்பத்குமார்.

ராம்குமார் மரண நாளன்று, உடலை முதலில் பெற்றுக்கொண்ட மருத்துவர் அப்துல் காதர் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் இறந்த நேரத்தில் முரண்பாடு இருப்பதும் அம்பலமாகியுள்ளது.

சிறையில் ராம்குமார் உயிரிழந்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட நீதிவிசாரணையிலும் திருப்த்தி இல்லை என்கிறார் வழக்கறிஞர் ராம்ராஜ்.

சிறப்புக்குழு அமைத்து, ராம்குமார் மரண வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உடைத்துப் பேசுகிறார் மூத்த தடயவியல் நிபுணர் சம்பத்குமார்.

மறு விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என ராம்குமாரின் பெற்றோரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உண்மை நெருங்காலம் உறங்கா!! என்பதைப்போல், இந்த வழக்கில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்.. இந்த வழக்கின் மீது மீண்டும் ஒளியைப் பாய்ச்சியுள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? நீதியை நிலைநாட்டுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: