முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தருமபுரியில் அதிகபட்சமாக 8 இடங்களில் மறுவாக்குப்பதிவு

தருமபுரியில் அதிகபட்சமாக 8 இடங்களில் மறுவாக்குப்பதிவு

பாமகவினர் கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்தது

பாமகவினர் கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்தது

நத்தமேடு பகுதியில் பாமகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டதாக எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தனர்.

  • Last Updated :

தமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தநிலையில், சில பகுதிகளில் நடைபெற்ற வன்முறையின் காரணமாக, 10 வாக்குசாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்தவேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு தமிழகத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்தநிலையில், தமிழகம் முழுவதுமுள்ள 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தருமபுரியில் 8 வாக்குச் சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச் சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோட்டில் 1 வாக்குச் சாவடியிலும் மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 19-ம் தேதி இந்த வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட நத்தமேடு பகுதியில் பாமகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டதாக எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தருமபுரியில் பாப்பிரெட்டிபட்டிக்கு உட்பட்ட நத்தமேடு பகுதியில் 4 வாக்குச்சாவடிகளிலும், ஜாலிப்புத்தூரில் 2 வாக்குச்சாவடிகளிலும், அய்யம்பட்டியில் 2 வாக்குச்சவாடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Also Watch

top videos

    First published:

    Tags: Dharmapuri S22p10, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019