Home /News /tamil-nadu /

ReElection: அசம்பாவித சம்பவங்கள் நடந்த 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

ReElection: அசம்பாவித சம்பவங்கள் நடந்த 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

RE Election

RE Election

Local Body Election 2022: சென்னை, மதுரை உட்பட 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது

    தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடந்த 5 வார்டுகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது.

    தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை உட்பட ஒரு சில இடங்களில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

    சென்னை வண்ணாரப்பேட்டையில் 51வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 1,174-ல் திமுகவினர் வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்ற முயன்றதாகவும், அப்போது அங்கு அருகில் இருந்தவர்கள் அதனை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. திமுகவினரை கண்டித்து வாண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குசாடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடி பகுதியில் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலின்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உடைக்கபட்டது. இது தொடர்பாக திமுக பிரமுகர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பிரச்னை ஏற்பட்ட 179-வது வார்டு, வாக்குச்சாவடி எண் 5,059 -ல் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் 17-வார்டு உள்ள பெண்களுக்கான வாக்குச்சாவடியில் 127 வாக்காளர்களுக்கு பதிவேட்டில் கையெழுத்து வாங்கவில்லை எனக் கூறி திமுகவினர் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 16 வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரின் சின்னத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மறுதேர்தல் நடத்தப்படுகிறது. சுயேச்சை வேட்பாளர் விஜயலெட்சுமி ஒதுக்கப்பட்ட ஸ்பேனர் சின்னம் தபால் வாக்குச்சீட்டுகளில் ஆணி சின்னமாக பதிவிடப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் சரியாக பொருத்தப்படவில்லை என்றும் புகார் எழுந்த நிலையில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை நகராட்சி 25வது வார்டுக்குட்பட்ட சுயேச்சை வேட்பாளர் தனக்கு ஆதரவாக வார்டுக்கு வெளி ஆட்களை வரவழைத்து கள்ள ஓட்டு போட்டதாக கூறி திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு 5, 7வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறுகிறது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

     

     
    Published by:Arun
    First published:

    Tags: Local Body Election 2022

    அடுத்த செய்தி