Home /News /tamil-nadu /

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள்... கனிமொழி எம்.பி. கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள்... கனிமொழி எம்.பி. கண்டனம்

அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்?  - கனிமொழி

அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? - கனிமொழி

அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? - கனிமொழி

    தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ரிசர்வ் வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காத சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

    குடியரசு தினவிழாவையொட்டி இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டு வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டன. அந்த வகையில் சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

    அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு ரிசர்வ் வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காமல் இருந்துள்ளனர். இதுதொடர்பாக செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டபோது, உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை காண்பிக்க முடியுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் ஏதும் அளிக்காமல் அலுவலர்கள் வெளியேறினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.



    இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



    தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் தனது ட்விட்டர் பதிவில், சமூகத்திற்கு வங்கிகள் மிக முக்கியமானவை. இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.



    மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தனது ட்விட்டர் பதிவில், அனைவராலும் போற்றப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது தமிழ்நாடே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது. ஆனால் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலருக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. அய்யோ பாவம்!



    இன்றைய குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அவர்களில் பலரை எழுந்து நிற்க விடாமல் இறுக்கிப் பிடித்து தடுத்தது எது? மாநில அரசின் அரசாணையை மதிக்க வேண்டும் என்பதுகூட புரியாதபடி தடுமாறியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: RBI

    அடுத்த செய்தி