தமிழகத்துக்கு கடன் அளவைக் குறைக்கும் ஆர்.பி.ஐ - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையால் அதிகமாக கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தமிழக மாவட்டங்கள் பாதிக்கும் என்பதால், மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்துக்கு கடன் அளவைக் குறைக்கும் ஆர்.பி.ஐ - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி.
  • Share this:
முன்னுரிமை வாய்ந்த துறைகள் எனப்படும் விவசாயம், கல்வி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு மாவட்டங்களுக்கு ரிசர்வ் வங்கிக் கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கடன் அதிகம் பெறும் மாவட்டங்களுக்கு கடன் அளவைக் குறைக்கவும், குறைவாக கடன் பெறும் மாவட்டங்களுக்கு வளர்ச்சி பணிகளுக்காக கடன் அளவை அதிகரிக்கவும் ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.

Also read: செல்போன், லேப்டாப்பிலேயே தேர்வு எழுதலாம் - பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேதி அறிவிப்புதமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களும் அதிக கடன் பெறும் மாவட்டங்களின் பட்டியலில் உள்ளதாகவும், முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தியதால் மானிய குறைப்புப் பட்டியலில் தமிழக மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


ஆர்பிஐ-யின் இந்த புதிய அறிவிப்பால் தமிழகம் பெரிதும் பாதிக்கும் என்பதால் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்குக் கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
First published: September 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading