ஏடிஎம் சேவையில் புதிய மாற்றம் - ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு

ஹார்டுவேர், மென்பொருள் பிரச்சினைகளால் பணம் எடுக்க முடியாதபோது, அதனை பரிவர்த்தனையாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: August 15, 2019, 10:03 AM IST
ஏடிஎம் சேவையில் புதிய மாற்றம் - ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு
ரிசர்வ் வங்கி
Web Desk | news18
Updated: August 15, 2019, 10:03 AM IST
தொழில்நுட்பக் காரணங்களால் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாதபோது, அதனை இலவச பரிவர்த்தனைக்கான எண்ணிக்கையில் சேர்க்கக் கூடாது என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்-களில் மாதந்தோறும் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்-களில் மூன்று முறையும் கட்டணமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த வரம்பைத் தாண்டி பணம் எடுக்கப்படும்போது, அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பண இருப்பை பார்ப்பது, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாததால் பணம் எடுக்க முடியாதது போன்றவையும் பரிவர்த்தனையாக சேர்க்கப்படுகிறது.

இந்நிலையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஹார்டுவேர், மென்பொருள் பிரச்சினைகளால் பணம் எடுக்க முடியாதபோது, அதனை பரிவர்த்தனையாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாதது போன்ற காரணங்களால் ஏற்படும் செயலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இருப்பை பார்ப்பது, காசோலை புத்தகம் வழங்கக் கோருவது, வரி செலுத்துவது, பண பரிமாற்றம் போன்ற ரொக்கமற்ற பரிவர்த்தனைகளை இலவசமாக பரிவர்த்தனை வரம்பில் சேர்க்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க... Independence Day 2019 LIVE: வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படுகிறது - முதல்வர் அறிவிப்பு
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...