Home /News /tamil-nadu /

தேசிய கொடி பாஜகவின் சொத்தா? பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் ராகுல் விமர்சனம்

தேசிய கொடி பாஜகவின் சொத்தா? பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் ராகுல் விமர்சனம்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

நாட்டின் கோடிக்கணக்கான மக்களை ஒற்றுமைப் படுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதை உணர்ந்து, இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு "பாரத் ஜோடோ" என்ற யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இதற்கான சென்னை வந்த ராகுல், ஸ்ரீபெரும்புதூரில் அவரின் தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நினைவிட வளாகத்தில் அரச மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்தார்.

    பின்னர், சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். அங்கு, கடலுக்கு நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் சென்று பார்வையிட்டார். மற்றொரு பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் சென்று பார்வையிட்டார். அத்துடன், காமராஜர் நினைவு மண்டபத்துக்கு சென்று அங்குள்ள அவரது சிலைக்கு, மரியாதை செலுத்தித்தினார். இதையடுத்து காந்தி மண்டபத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார்.

    இதையடுத்து, "இந்திய ஒற்றுமை பயணத்தின்" தொடக்க விழாவில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தனர்.

    Also Read : காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல்.. ராகுல் ஓடினாலும் எந்த பயனும் இல்லை - வானதி சீனிவாசன்

    காந்தி நினைவு மண்டபம் முன்பாக தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம், 600 மீட்டர் தொலைவில் உள்ள, கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள், ராகுல் மேற்கொண்ட பயணத்தின் மூலம் மத்தியில் மாற்றம் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

    முதல் நாள் நடைபயணத்தை அடுத்து, கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, வேணுகோபால், திக்விஜய் சிங், கே.எஸ்.அழகிரி, உம்மன் சாண்டி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    இதில், நடை பயணத்தின் நோக்கம் குறித்து உரையாற்றிய ராகுல் காந்தி, முக்கடல்கள் சந்திக்கும் இடத்தில் இருந்து பயணத்தை தொடங்கியுள்ளது மகிச்சியளிப்பதாக தெரிவித்தார். தேசியக் கொடி ஒவ்வொரு இந்தியரின் அடையாளமாக விளங்குகிறது என்றார். ஆனால், தற்போது தேசியக் கொடி தாக்குதலுக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.

    இந்திய தேசிய கொடி சாதரணமாக கொடுக்கப்படவில்லை கிடைக்கட்டடவில்லை. இந்திய மக்களால் மீட்டெக்கப்பட்டது. தேசிய  கொடி இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் அடையாளபடுத்தும். ஒவ்வொருவரின் மதத்தையும் மொழியையும் , மாநிலத்தையும் பிரதிநிதி த்துவ படுத்துகிறது. எந்த மாநிலத்திற்கும் தனிப்பட்ட முறையில் சொந்தமான கொடி அல்ல  என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: BJP, Congress, Rahul gandhi

    அடுத்த செய்தி