Home /News /tamil-nadu /

பொங்கல் பரிசோடு சேர்த்து ஏன் பணம் வழங்கவில்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

பொங்கல் பரிசோடு சேர்த்து ஏன் பணம் வழங்கவில்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

பொங்கல் பரிசோடு சேர்த்து ஏன் பணம் வழங்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசோடு சேர்த்து ரொக்க பணமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போதைய திமுக அரசில் பொங்கல் பரிசா ரொக்க பணம்  ஏன் வழங்க வில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், மதுரை ரெயில் நிலையம் அருகே அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில்,  சாலையோரம் வசிக்கும் வறியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசோடு சேர்த்து ரொக்க பணமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போதைய திமுக அரசில் பொங்கல்  பரிசாக ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை. ஏழை, எளியவர்களின் நலன் கருதி முழு ஊரடங்கின் போது, அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒமைக்கரான் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 நாட்கள் வீட்டில் தனியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

நாளையுடன் ஊரடங்கு கட்டுப்பாடு முடிகிறது... பொங்கலுக்கு தளர்வா ? தடையா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை



 அந்த சூழலில் அவர்களுக்கு உணவு மற்றும் உதவியாளர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாவட்டம் சிலைமான் அருகே கொரோனா அச்சத்தால், வறுமையால் 4 பேர் விஷம் அருந்தி உள்ளனர். அதில் ஜோதிகா, ரித்தீஷ் 2 பேர் உயிரிழந்து விட்டனர்.  மேலும் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

எனவே, இவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:

Tags: Lockdown, RB Udayakumar

அடுத்த செய்தி