ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புயல் பாதிப்புக்கு ரூ.3,758 கோடி வழங்க மத்திய குழுவிடம் கோரிக்கை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

புயல் பாதிப்புக்கு ரூ.3,758 கோடி வழங்க மத்திய குழுவிடம் கோரிக்கை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பை சீர்செய்ய 3,758 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணிகள் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிவர் புயல் மன்னர் வளைகுடாவில் 30 மணி நேரத்திற்கும் மேலாக நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு நேற்று காலை 11 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அதே இடத்தில் நிற்கிறது என தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 515 முகாமில் 1,21,455 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். புரேவி புயல் காரணமாக தாழ்வான பகுதி மற்றும் ஆற்றோரம் வசிக்கும் மக்கள் நிவாரண முகாமிற்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

  தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி குறித்த அச்சத்தை மக்களுக்கு போக்கும் வகையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் என தெரிவித்தார்.

  புயல் மற்றும் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழுந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு, வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

  மேலும் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது, தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தண்ணீர் வடிந்த பின்னர்தான் பாதிப்புகள் குறித்த முழு விவரம் தெரியவரும் என தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

  மத்திய குழுவினர் ஆய்வு கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்றது புயல் சேதம் குறித்து நாளை முதல் ஆய்வில் ஈடுபடவுள்ளனர். சேதார மதிப்பீடுகளை மத்திய குழுவினரிடம் தமிழக அரசு அளித்துள்ளது. தற்காலிக நிவாரணமாக 650 கோடி ரூபாய் தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடனடி சீரமைப்பிற்கு ரூ.3,108 கோடியும் மொத்தமாக, 3,758 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: Cyclone Nivar, R.B.Udhayakumar