ஆர்.பி.உதயகுமார் வேட்புமனுவில் அரசு வழக்கறிஞர்கள் கையொப்பம் - அமமுக கூட்டணி புகார் மனு

ஆர்.பி.உதயகுமார் வேட்புமனுவில் அரசு வழக்கறிஞர்கள் கையொப்பம் - அமமுக கூட்டணி புகார் மனு

அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது.

  • Share this:
அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேட்புமனுவில் அரசு வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டிருப்பதால் வேட்புமனுவை நிறுத்திவைக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது.

மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 26 வேட்பாளர்களுக்கான வேட்புமனு பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் சௌந்தர்யா முன்னிலையில் நடைபெற்றுவருகிறது.

அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வேட்புமனுவில் அரசு தரப்பு வழக்கறிஞர் பரிந்துரை கையெழுத்திட்டுள்ளதால் உதயகுமாரின் மனுவை தள்ளுபடி செய்ய கோரி அமமுக கூட்டணி கட்சியான மருதுசேனை அமைப்பின் வேட்பாளர் தரப்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2 மணி நேர தாமதத்திற்கு பின் வேட்புமனு பரிசீலனை தொடங்கி நடைபெற்றுவருகிறது. முன்னதாக வேட்புமனு பரிசீலனையை தனிதனியாக நடத்துவதற்கு அதிமுக தவிர்த்து அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேர்தல் அலுவலரிடம் வேட்பாளர்கள் வாக்குவாதம் செய்த பின்னர் ஒரே அறையில் அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை தொடங்கி நடைபெற்றுவருகிறது.ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நடைபெறும் வேட்புமனு பரிசீலனையில் வேட்புமனுக்கள் ஏற்பது குறித்து தேர்தல் அலுவலர் உடனுக்குடன் அறிவிப்பு வெளியிடும் நிலையில் திருமங்கலம் மட்டும் உடனுக்குடன் வேட்புமனு ஏற்பு குறித்த தகவல்கள் வெளியிடப்படாத சூழல் நிலவு வருகிறது.
Published by:Sheik Hanifah
First published: