சட்டமன்றத் தேர்தலில் உண்மையான தோல்வி தி.மு.கவுக்குதான்: அ.தி.மு.கவுக்கு அல்ல - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

சட்டமன்றத் தேர்தலில் உண்மையான தோல்வி தி.மு.கவுக்குதான். அ.தி.மு.கவுக்கு அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவில் வளாகத்தில் மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க இயக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அவர் தொண்டர்களிடையே உரையாற்றியபோது அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி, திமுக முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின், விலாசத்தை இழந்த அமமுக கட்சியும் முதலமைச்சர் வேட்பாளரை களத்தில் நிறுத்தி இருந்தது. பல கட்சிகளும் முதல்வர் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார்கள். முதலமைச்சராக போட்டியிட்ட வேட்பாளர்களில் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிக வாக்குகளை பெற்றவர். சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு 1,43,85,410 வாக்குகளை மக்கள் அளித்திருக்கிறார்கள்.

திமுக 1,56,87,421 வாக்குகள் பெற்றுள்ளார்கள். இதில் 3 சதவீதம்தான் வாக்கு வித்தியாசம். முதலமைச்சர் வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்று நின்றவர்களில் வென்றவர் எடப்பாடி பழனிசாமி தான். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விட அதிக வாக்குகளை பெற்றுள்ளது உண்மையாகவே தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது தெரிகிறது என பேசினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட அதிமுக அதிக வாக்குகள் பெற்று உள்ளது. ஆனால் திமுக நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது சட்டமன்றத் தேர்தலில் உண்மையான வெற்றி திமுகவுக்கு அல்ல அதிமுகவுக்கு தான் என பேசினார். அடக்குமுறைகளை கட்டவிழ்த்து அதிமுக தொண்டர்கள் மீது பொய்வழக்கு போடுகிறீர்கள்.

எதிர்க்கட்சியின் குரல்வளையை நசுக்கி விடலாம் என்று நினைத்தால் நீங்கள் போடும் தாளங்கள் தப்புத்தாளங்கள் ஆக மாறிவிடும் என பேசினார். வெற்றி தோல்வி என்பது ஜனநாயகத்தில் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல. அந்த நாணயம் செல்லாமல் போய்விடாது. நீங்கள் ஆளும் கட்சியாக இருந்தால் நாங்கள் எதிர்க்கட்சி. நீங்கள் எதிர்க் கட்சியாக இருந்தால் நாங்கள் ஆளுங்கட்சி இதை மாற்ற முடியாது. அப்படித்தான் இந்த தமிழ்நாட்டு மக்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.மக்கள் நம்மை வெறுத்து இருந்தால் புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் எப்படி இத்தனை பேர் இரட்டை இலைக்கு வாக்களித்து இருப்பார்களா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பீகாரில் இருந்து வந்த பிரசாந்த் கிஷோரின் கோயபல்ஸ் பிரச்சாரத்தைதாண்டி அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது வரலாற்று சாதனை. தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார் விலாசத்தை இழந்து நிற்கும் அமமுக என்ற கட்சி தோன்றும் போதே ஆட்சியைப் பிடிப்போம் என்று இல்லாமல் அதிமுகவை அழிப்போம். இரட்டை இலையை முடக்குவோம். அதிமுகவை கைப்பற்றுவோம் என்று நினைத்தார்கள். உலகத்திலேயே ஒரு கட்சியை அழிக்க வேண்டுமென்று தொடங்கப்பட்ட கட்சி இன்று விலாசத்தை இழந்து நிற்கிறது என பேசினார்.
Published by:Karthick S
First published: