• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முல்லை பெரியாறு பிரச்சனையில் தும்பைவிட்டு வாலைப்பிடிப்பதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

முல்லை பெரியாறு பிரச்சனையில் தும்பைவிட்டு வாலைப்பிடிப்பதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக, வருகின்ற 9ஆம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மாபெரும் கண்டண ஆர்பாட்டம் நடைபெறும்.

  • Share this:
    முல்லை பெரியாறு அணை பிரச்சனை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்யும் நிலையில், அணையில் நீர் திறக்கப்பட்டதற்கு உரிய விளக்கம், முழு விசாரணை மேற்கொண்டு முல்லை பெரியாறு பிரச்சனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

    இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசு தும்பை விட்டு வாலைபிடிப்பதா என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். வட கிழக்கு பருவமழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    கடந்த அக்டோபர் 29ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 138.95 அடியை எட்டியது.

    அப்போது கேரளா அமைச்சர்கள் முன்னிலையில் கேரளா பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடபட்டது. முல்லைப்பெரியாறு அணையின் தண்ணீர் திறக்கும் உரிமை இதுவரை தமிழகத்திற்கு தான் உரிமை இருந்தது, ஏனென்றால் அணை பராமரிக்கும் உரிமை, அணை கையாளும் உரிமை தமிழகத்திற்குதான் உள்ளது. ஆனால் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை
    அதிகாரிகள் ஆகியோர் இல்லாமல் நீரை திறந்திருப்பது பெரும் சர்ச்சையாக உள்ளது.

    கடந்த 29ஆம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்களாக மேலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறிப்பாக கேரளாவிற்கு அணையை ஒட்டியுள்ள 8 மதகுகளிலிருந்து வினாடிக்கு 3,568 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் சாதிப்பது உள்நோக்கமா? அல்லது அரசியலா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி
    உள்ளனர்.

    மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் நீண்ட நெடிய அனுபவம் உள்ளவர் நீர் இருப்பு குறித்து கலவரம் இல்லாமல் அவருக்கு தகவல் போய் சேரும் இந்த கலவரத்தை கண்டும் காணாமல் இருந்தது மர்மம் என்ன? இது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெற்றுதந்த உரிமை என்ற காரணத்தினாலா? விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியது அ.இ.அ.தி.மு.க அரசு என்ற காரணத்தினாலா? தன் சொத்தையெல்லாம் விற்று அணை கெட்டிய பென்னிக்குயிக்கிற்கு மணிமண்டபம் அமைத்து அவருக்கு அழியா புகழை உருவாக்கிய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதன் காரணத்தினாலா மாண்புமிகு அமைச்சர் அணையை நேரில் ஆய்வுசெய்கிறார். ஆனால் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டும்.

    முல்லை பெரியாறு குறித்து ஏன் அரசு மௌனமாக இருக்கிறது. உண்மை நிலையை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எடுத்து சொல்ல தயங்குகிறது, பின்வாங்குகிறது என்ற கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்தியும், தமிழக உரிமையை காப்பாற்ற வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள்
    வருகின்ற 9ஆம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மாபெரும் கண்டண ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள்.

    இந்த ஆர்பாட்டத்தில் பொதுமக்களும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்கிறார்கள். தற்போது கூட மீண்டும் விவசாயிகள் மத்தியில் ஒரு கோரிக்கை எழுப்பபட்டு வருகிறது. பீர்மேடு, தேவிகுளம், ஆகிய பகுதிகளை தேனி மாவட்டத்துடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூடலூர் முல்லை சாரல் விவசாய சங்கத்தினர் நவம்பர் 6ஆம் தேதி ஆர்பாட்டம் செய்ய உள்ளனர்.

    ஆர்பி உதயகுமார்


    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக தேக்கி கொள்ளலாம். பேபி அணை சிற்றணை பழுதுபார்க்கப்பட்டபின் 152 அடியாக தேக்கி கொள்ளலாம் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றுத்தந்து தந்தார்கள். ஆனால் தமிழக அரசு பாராமுகத்துடன் அக்கறை இல்லாமல் இருக்கிறது விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    Must Read : தீபாவளியன்று விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 700-க்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு

    ஆகவே இந்த நீர் திறபிற்கு உரிய விளக்கம், முழு விசாரணை மேற்கொண்டு முல்லை பெரியாறு பிரச்சனையில் மாண்புமிகு முதலமைச்சர் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: