Home /News /tamil-nadu /

பழனிவேல் தியாகராஜனுக்கு சமூக பொருளாதாரம் தெரியாது - ஆர்.பி.உதயகுமார்

பழனிவேல் தியாகராஜனுக்கு சமூக பொருளாதாரம் தெரியாது - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவை அசைத்துப் பார்க்க கலைஞரால் கூட முடியவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வணிக பொருளாதாரம் படித்தவர், அவருக்கு சமூக பொருளாதாரம் தெரியாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில் அண்ணா தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் பொறுப்பிற்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வு பைபாஸ் சாலையில் உள்ள அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,  நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,
“அதிமுக ஆளும் கட்சியாக இருந்தால் வேஷ்டியை தேய்த்து கட்டிக்கொண்டும், எதிர்கட்சியாக இருந்தால் வேஷ்டியை மடித்து வைத்து விடும் பழக்கமும் கொண்டதல்ல. ஆனால், திமுகவினர் எதிர்கட்சியாக மாறி விட்டால் வேஷ்ட்டியை மடித்து வைத்து விட்டு பேண்ட் சட்டைக்கு மாறி விடுவார்கள்.

அதிமுகவை அசைத்துப் பார்க்க கலைஞரால் கூட முடியவில்லை. விசிலடிச்சான் குஞ்சு என்று அதிமுக தொண்டர்களை விமர்சித்தார், எம்.ஜி.ஆர். கட்சிக்கு கேரண்டி இல்லை என்றார். எவ்வளவோ பேர் சென்றும் அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, யார் எங்கு போனாலும் அதிமுக கலங்காது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளி நாட்டில் இருந்தவர். அவர் விளம்பரத்திற்காகவே இப்போது வெள்ளை அறிக்கை வெளியிட்டு உள்ளார். 2026 ஆம் ஆண்டிற்கு முன்னரே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம். அப்போது அதிமுக ஆட்சிக்கு வரும். விளம்பரத்திற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. " என்று கூறினார்.

செல்லூர் ராஜூ


முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்,
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வணிக பொருளாதாரம் படித்தவர், அவருக்கு சமூக பொருளாதாரம் தெரியாது. அதனால் தான் வெள்ளை அறிக்கைக்கு நான் தான் பொறுப்பு என்கிறார். அரசின் செயலாளரை பக்கத்தில் வைத்து அறிக்கை வெளியிட்டு விட்டு நிதி அமைச்சர் மட்டும் எப்படி அதற்கு பொறுப்பேற்க முடியும்? அது அரசின் அறிக்கை தான்.

கலர் டி.வி. கொடுத்த விவகாரத்தையும் வெள்ளை அறிக்கையில் சொல்லுங்கள். ஆதி திராவிடர் நல துறைக்கு ஒதுக்கிய பணத்தை டி.வி. வாங்க மாற்றியதையும் சொல்ல வேண்டும். அப்போது தான் அதில் முழுமையான வெளிப்படை தன்மை இருக்கும்.

Must Read : SP Velumani : எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு - அதிமுகவினர் போராட்டம்

சேவைத்துறையின் பற்றாக்குறையை எப்படி நஷ்டம் என சொல்ல முடியும்? பிற மாநிலங்களில் இல்லாத திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளாக திமுக செயல்படுத்தி உள்ளது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் போது கடன் சுமை வருவது இயல்பு. வெள்ளை அறிக்கை வெற்று அறிக்கையாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டமன்றத்தில் திமுக ‘ஒன்றும் இல்லை’ என்பதை உணர்த்தும் வகையில் தான் வெள்ளை அறிக்கை உள்ளது” என்று கூறினார்.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, RB Udayakumar, Sellur Raju

அடுத்த செய்தி