Home /News /tamil-nadu /

பேரறிவாளன் விடுதலை... சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பெருமை ஜெயலலிதாவையே சாரும் - ஆர். பி. உதயகுமார்

பேரறிவாளன் விடுதலை... சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பெருமை ஜெயலலிதாவையே சாரும் - ஆர். பி. உதயகுமார்

Perarivalan release : 7 பேர் விடுதலைக்காக முதன்முதலாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பெருமை ஜெயலலிதாவையே சாரும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

Perarivalan release : 7 பேர் விடுதலைக்காக முதன்முதலாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பெருமை ஜெயலலிதாவையே சாரும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

Perarivalan release : 7 பேர் விடுதலைக்காக முதன்முதலாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பெருமை ஜெயலலிதாவையே சாரும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்ய இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 7 பேர் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பெருமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோரையே சேரும் என திருமங்கலம் அருகே முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசினார்.

  மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உரப்பனூர் இந்திரா காலனி பொன்னமங்கலம், மேலேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட நாடக மேடைகளை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மக்களிடையே உரையாற்றினார்.

  அவர் பேசியபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக பெண்களுக்கு உதவி தொகை 1,000 ரூபாய் தருவதாக கூறினார்கள் இதுவரை எந்த ஒரு திட்டமும் நடைபெறாமல் இருக்கிறது. இது குறித்து எதிர்கட்சி தலைவரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினர் அதற்கு உரிய பதில் வரவில்லை.

  தினந்தோறும் தொலைக்காட்சியை திறந்தால் முதல்வரின் திருமுகத்தை தவிர வேறு யாரையும் பார்க்க முடியாது. அந்த அளவில் அவருடைய செயல்பாடு இருக்கிறது. இவர்களுடைய திட்ட செயல்பாடு எப்படி இருக்கிறது என்றால், முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை. மின்சாரம் தடைபடுகிறது என்று இருக்கிறது. இதற்கு எந்த பதிலும் சட்டமன்றத்தில் இல்லை.

  சட்டசபையில் சொல்வது ஒன்று மக்களிடத்தில் நடப்பது ஒன்றாக இருக்கிறார்கள். திமுகஅரசு பொறுப்பேற்று ஓராண்டு ஆகிறது எடப்பாடி, ஓபிஎஸ் அவர்களும் அடிக்கல் நாட்டிய கட்டிடங்களை திறந்து வைத்து அதில் கல்வெட்டு வைக்கிறார்களே தவிர புதிய திட்டங்கள் எதையும் அவர்கள் தொடங்கவில்லை சமூக நீதியைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா.

  சமூகநீதி பற்றி பேசுகிறார்கள் ஆனால் சமூக நீதிக்காக சட்டசபையில் சட்டத்தை இயற்றி இந்திய அரசியலமைப்பு ஒன்பதாவது அட்டவணையில் இடம் பெற செய்து, சட்ட பாதுகாப்பை வழங்கியிருக்கிறோம்; நீட் தேர்வு ரத்து செய்கிறேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து, மாணவர்களை  ஏமாற்றியவர்கள், ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று கூறியும், 1500 ரூபாய் தருகிறோம் என்று கூறியும், 2500 ரூ பொங்கல் பரிசை பறித்துவிட்டு ஆட்சியில் இருக்கும் நீங்கள் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லுவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இன்றைக்கு ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் அரசு தான் திராவிட மாடல் அரசா? என மக்கள் கேள்வி கேட்கிறார்கள் என்று பேசினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தொடர்ந்து மேலேந்தல் கிராமத்தில் உரையாற்றிய ஆர்.பி. உதயகுமார், இன்றைக்கு பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது ஆனால் 7 பேர் விடுதலை தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிய பெருமை ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி , ஓபிஎல் ஆகியோரை சாரும்.

  Must Read : பேரறிவாளன் விடுதலை - குடும்பத்தினர் ஆனந்தக்கண்ணீர்.. வைரலாகும் வீடியோ

  7 பேர் விடுதலைக்காக முதன் முதலாக மன உறுதியோடு தைரியத்தோடு தமிழர்களை காக்கும் காவல் தெய்வமாக ஜெயலலிதாவும், எடப்பாடியும் மோட்டிவேஷனாக உள்ளனர். அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்து தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுத்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள மகத்தான தீர்ப்பு வந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

  செய்தியாளர் - சிவக்குமார்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Perarivalan, RB Udayakumar

  அடுத்த செய்தி