Home /News /tamil-nadu /

ஆர்.பி.உதயக்குமாருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி- அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆர்.பி.உதயக்குமாருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி- அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆர்பி உதயகுமார்

ஆர்பி உதயகுமார்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளராக அக்ரி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமனம்

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  சட்டமன்ற துணைச் செயலாளராக அக்ரி.கிருஷ்ண மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டதோடு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

    அதேவேளையில் தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும்  இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளனர்.

    இதையும் படிங்க: காவலர்கள் சொந்த வாகனங்களில் ‘போலீஸ்’ ஸ்டிக்கரை அகற்ற வேண்டும்- டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

    இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் உள்ள நிலையில், இதனை பறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளராக அக்ரி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: EPS, RB Udayakumar, TN Assembly

    அடுத்த செய்தி