கமல்ஹாசனைவிட திரைத்துறையில் சாதனைகள் புரிந்தவர்கள் வேறு யார்? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா 50-வது ஆண்டாக இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடக்க உள்ளது. இதனை ஒட்டி, செய்தியாளர்களை சந்தித்த மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற சிறப்பு விருதை வழங்குவதாக அறிவித்தார்.
கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதால்தான் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்படுகிறது என்று விமர்சனங்களும் எழுந்துள்ளனர்.
நடனக்கலைஞர்,நடிகர்,பாடகர்,பாடலாசிரியர்,இயக்குநர்,தயாரிப்பாளர்,கலைத்துறையில் 60 ஆண்டுகள் பணியாற்றியவர் @ikamalhaasan ஐ விட திரைத்துறையில் சாதனை புரிந்தவர்கள் வேறு யார் ? pic.twitter.com/S0tVcFqePa
இதுகுறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பியும் எழுத்தாளருமான ரவிக்குமார் ட்விட்டர் பதிவில், ‘நடனக்கலைஞர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், கலைத்துறையில் 60 ஆண்டுகள் பணியாற்றிய கமல்ஹாசனை விட திரைத்துறையில் சாதனை புரிந்தவர்கள் வேறு யார்? ’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.