Home /News /tamil-nadu /

அரசு வங்கி ஊழியர்களை ‘கழிசடைகள்’ என்ற குருமூர்த்தி... நிர்மலா சீதாராமன் கண்டிக்காதது ஏன் - ரவிக்குமார் எம்.பி. கேள்வி

அரசு வங்கி ஊழியர்களை ‘கழிசடைகள்’ என்ற குருமூர்த்தி... நிர்மலா சீதாராமன் கண்டிக்காதது ஏன் - ரவிக்குமார் எம்.பி. கேள்வி

குருமூர்த்தி

குருமூர்த்தி

Nirmala Sitharaman: ‘துக்ளக்’ ஆண்டுவிழாவில் அரசாங்க வங்கிகளில் பணியாற்றுகிறவர்கள் ‘கழிசடைகள்’ என்று கூறிய குருமூர்த்தியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டிக்காதது ஏன் என ரவிக்குமார் எம்.பி.கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ‘துக்ளக்’ இதழின் ஆண்டுவிழா ஆண்டுதோறும் ஜனவரி 14ஆம் தேதி நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஞாயிற்றுக் கிழமை (மே-8) சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த ‘துக்ளக்’ இதழின் 52ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய ஆடிட்டர் குருமூர்த்தி, பிரதமர் மோடி, பாஜக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை புகழ்ந்து பாராட்டிப் பேசினார். அத்துடன், காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், மற்றும் சில கட்சிகளை விமர்சித்தும் பேசினார்.

    மேலும், ஒன்றிய அரசு என்று தமிழக அரசு அழைப்பது தேசவிரோதம், கேவலமான செயல் என்று கூறிய குருமூர்த்தி, சட்டம், நீதி போன்ற அம்சங்கள் திமுகவிற்கு இல்லை. திமுக-வுக்கு ஆன்மீகம் தான் முதல் எதிரி. நாத்தீகர் வேடத்தில் ஆத்தீகர்கள் திமுக ஆட்சி காலத்தில் வருகிறார்கள். அப்படி வருகிறவர்களால் ஆபத்து அதிகம் என்று விமர்சித்துப் பேசினார்.

    நிர்மலா சீதாராமன்


    தொடர்ந்து பேசிய குருமூர்த்தி, அரசாங்க வங்கிகளில் பணியாற்றுகிறவர்கள் ‘கழிசடைகள்’ என்று கூறினார். அதைக் கேட்டு முகம் சுழித்தவாறு இல்லை என்பதுபோல் தலையாட்டினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் பிறகு அது குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், குருமூர்த்தியின் இந்த பேச்சுக்கு டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவரும், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், குருமூர்த்தியின் பேச்சை நிதியமைச்சர் கண்டிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.



    இது குறித்து டிவிட்டரில் அவர்,“இந்திய அரசின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் இருக்கும் மேடையில், அரசாங்க வங்கிகளில் பணியாற்றுகிறவர்கள் ‘கழிசடைகள்’ என குருமூர்த்தி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. அந்தப் பேச்சை மறுப்பதுபோல் தலையை ஆட்டிய நிதி அமைச்சர் அவர்கள் அதைக் கண்டிக்காதது ஏன்?” என குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Auditor Gurumoorthy, Nirmala Sitharaman, Villupuram MP Ravikumar

    அடுத்த செய்தி