திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தான் திமுக-வை சேர்ந்தவன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சின்னராஜ் ஆகியோர் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி, தலைவர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது தான் ஒரு திமுக உறுப்பினர் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை உறுப்பினர் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குதான் தொடர முடியுமே தவிர பொதுநல வழக்கு தொடர முடியாது என்பதால் தனக்கெதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Must Read : பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : தமிழக அரசு இன்று முக்கிய ஆலோசனை
முன்னதாக இந்த வழக்கில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, தேர்தலுக்கு முன்னதாகவே தான் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்து விட்டதாக பதில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.