ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Covishield : கோவிஷீல்டு தடுப்பூசிக்கான கால இடைவெளியைக் குறைக்க முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள்

Covishield : கோவிஷீல்டு தடுப்பூசிக்கான கால இடைவெளியைக் குறைக்க முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள்

கோவிஷீல்டு தடுப்பூசி

கோவிஷீல்டு தடுப்பூசி

மத்திய அரசு கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளியைத் தன்னிச்சையாக அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையிலான கால இடைவெளியை குறைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனாவுக்காகப் போடப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையிலான கால இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக நீட்டித்து மத்திய அரசு கடந்த 13.05.2021 அன்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தரவுகளின் அடிப்படையிலானதல்ல என்றும் National Technical Advisory Group on Immunisation (NTAGI) குழுவைச் சார்ந்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்குப் புறம்பானது என்றும் தற்போது தெரியவந்துள்ளது ஒன்றிய அரசுக்கு கொரோனா தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கென அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் ஆலோசனைகளுக்குப் புறம்பாக ஒன்றிய அரசு இந்த முடிவை அறிவித்திருப்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டுள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 என்ற வகை உருமாற்றம் அடைந்த வைரஸ் இப்போது உலக அளவில் அதிகம் பரவிக் கொண்டிருக்கிற வைரஸ் வகையாக அடையாளப்படுத்தப்பட்டு உலக சுகாதார நிறுவனத்தால் கவலைக்குரிய வைரஸ் (variant of concern) என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வேகமாகப் பரவுவது மட்டுமன்றி தடுப்பூசிகளைத் தாண்டி தொற்றை ஏற்படுத்தக்கூடியது என்றும் தெரியவந்துள்ளது.

எம்.பி ரவிக்குமார்

இந்த வைரஸ் வகையில் இன்னொரு புதிய உருமாற்றம் அடைந்த வைரஸின் வகை ( Delta Plus or AY.1 ) சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டிருப்பது மேலும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், தடுப்பூசி மட்டும் தான் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இத்தகைய இக்கட்டான சூழலில் ஒன்றிய அரசு மாநிலங்களுக்குத் தடுப்பூசி வழங்கும் விஷயத்தில் தொடர்ந்து தாமதத்தை ஏற்படுத்தி வருவதோடு கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளியைத் தன்னிச்சையாக அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

Must Read : சிவசங்கர் பாபாவின் கேளம்பாக்கம் பள்ளியில் டிசி வாங்க திரண்ட பெற்றோர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரதமரிடம் இதுபற்றி எடுத்துரைத்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக் குழுவான National Technical Advisory Group on Immunisation (NTAGI) பரிந்துரைத்தது போல கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இடையிலான கால இடைவெளியை 8 முதல் 12 வாரம் எனக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அந்த கடிதத்தில் ரவிக்குமார் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

First published:

Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Covishield, MK Stalin