தனி ஆளாக கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டுவரும் "டீக்கடை" ரவி சந்திரன் - பொதுமக்கள் பாராட்டு!

"டீக்கடை" ரவி சந்திரன்

திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது 51) இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

  • Share this:
    திருப்பரங்குன்றம் சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்த டீ மாஸ்டர் ரவிச்சந்திரன் தனது மாருதி ஆம்னி வேனில் பொது மக்களுக்கு கொரோனா தொற்று பரவல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் முககவசம், கபசுர குடிநீரையும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். .

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது 51) இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் பரவி வரும் சூழ்நிலையில் இந்தியாவில் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர். கொரோனா முதல் அலையின் போதே திருப்பரங்குன்றம் தாலுக்காவை சுற்றியுள்ள கிராமம் முழுவதும் தனது சொந்த மாருதி ஆம்னி காரில் கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கியும், ஒலிப்பெருக்கி கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக் கவசங்கள் இன்றி வெளியே வரவேண்டாம் என பாடல்கள் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார் ரவிச்சந்திரன்.

    ஐந்தாவது வரை மட்டுமே படித்துள்ள  ரவிச்சந்திரன், தற்போது பரவி வரும் கொரோனா‌ தொற்று 2வது அலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பரங்குன்றம் சுற்று வட்டாரத்தில் உள்ள வலையங்குளம், பெருங்குடி, சாமநத்தம், சிந்தாமணிஎலியார்பத்தி, அவனியாபுரம் மற்றும் சிலைமான் உள்ளிட்ட 11 கிராமப்புற பகுதிகளில் காலை, மாலை இருவேளைகளிலும் தனது மாருதி வேனில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    Read More:    தமிழகத்தில் இன்று ரெம்டெசிவிர் மருந்து விற்பனை ரத்து; நாளை முதல் மருத்துவமனைகளுக்கு விநியோகம்!

    அவனியாபுரம் பெரியார் சிலை அருகே போக்கு வரத்து காவல் ஆய்வாளர் தங்கப்பாண்டியன் மூலம்  சாலைகளில் அத்தியாவசியம் இன்றி வெளியே வரும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் வழங்கி மைக் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.,
    தனி ஒருவனாக பொது வெளியில் கொரோனா தொற்றை தடுக்க விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் "டீக்கடை" ரவி சந்திரனின் தன்னலமற்ற பணி பாராட்டுக்குரியது.

    மதுரை திருமங்கலம் செய்தியாளர் சிவக்குமார்
    Published by:Arun
    First published: