Home /News /tamil-nadu /

இனி ரேஷனில் இது கட்டாயம்... குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்

இனி ரேஷனில் இது கட்டாயம்... குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்

ரேஷன் கடை

ரேஷன் கடை

Ration shops: இன்றிமையாப் பண்டங்கள் இருப்பு விவரம் கடைப்பணியாளரால் தினசரி பூர்த்தி செய்து காட்சிப்படுத்தப்பட வேண்டும்.  வேலை நேரம், நியாயவிலைக் கடையில் இன்றியமையாப் பண்டங்கள் இருப்பு விவரம்- ஆரம்ப இருப்பு, பெறப்பட்டது. விநியோகம் செய்யப்பட்டது, இறுதி இருப்பு உள்ளிட்ட விவரங்கள் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படும் அளவு மற்றும் விற்பனை விலை ஆகியவை அறிவிப்பு பலகையில் இடம்பெற வேண்டும்

மேலும் படிக்கவும் ...
    நியாயவிலை கடைகளில் இருப்பில் உள்ள பண்டங்களின் விவரங்களை குடும்ப அட்டைத் தாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தினமும் காட்சிப்படுத்த வேண்டும் என்று  உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

    பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விவரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், நியாயவிலைக் கடைகளில் இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுவதில்லை. இந்நிலையில், இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்,  துணை ஆணையாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் அட்டைதாரர் கவனத்திற்கு தகவல்கள் அடங்கிய தகவல் பலகைகள் பராமரித்து வைக்கப்பட வேண்டும் என அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதன் செயலாக்கம் கோரி தொடர்ந்து நினைவூட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தற்போது அட்டைதாரர்களிடமிருந்து பெறக்கூடிய புகார்களின் அடிப்படையிலும் நியாயவிலைக் கடைகள் தணிக்கையின்போது அறியக்கூடிய விவரங்களின் அடிப்படையிலும் தகவல் பலகைகள் நியாய விலைக் கடைகளில் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என தெரிய வருகிறது. எனவே பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தகவல் பலகைகள் கீழ்காணும் விவரங்களை உள்ளடக்கி  குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

    இதையும் படிங்க: தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு கட்டணமே வசூலிக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்!


    இன்றிமையாப் பண்டங்கள் இருப்பு விவரம் கடைப்பணியாளரால் தினசரி பூர்த்தி செய்து காட்சிப்படுத்தப்பட வேண்டும்.  வேலை நேரம், நியாயவிலைக் கடையில் இன்றியமையாப் பண்டங்கள் இருப்பு விவரம்- ஆரம்ப இருப்பு, பெறப்பட்டது. விநியோகம் செய்யப்பட்டது, இறுதி இருப்பு உள்ளிட்ட விவரங்கள் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படும் அளவு மற்றும் விற்பனை விலை ஆகியவை அறிவிப்பு பலகையில் இடம்பெற வேண்டும்.

    மேலும் படிக்க: 90-ஸ் கிட்ஸ் கல்யாணம் - உள்ளாட்சியோ ஊராட்சியோ வைரலாகும் திருமண பேனர்


    நியாயவிலைக்கடை தொடர்பாக புகார் அளிக்க உணவுத்துறை அமைச்சர் 044 25671427, உணவுத்துறை செயலாளர் 044 25672224, உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் 044 28592255 உள்ளிட்டோரின் எண்கள் இடம்பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Ration card, Ration Shop, Tamilnadu government

    அடுத்த செய்தி