ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷன் கடைகள் ஜனவரி 16ம் தேதி செயல்படுமா?.. அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!

ரேஷன் கடைகள் ஜனவரி 16ம் தேதி செயல்படுமா?.. அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

Ration shops Closed | நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு வரும் 16ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, முழு நீளக் கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்காக பயனாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வழக்கமாக, ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் 2வது வெள்ளிக் கிழமை விடுமுறை விடப்படும். ஆனால், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது காரணமாக ரேஷன் கடைகள் இயங்கின. இதனை ஈடு செய்யும் வகையில், வரும் 16ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜனவரி 27-ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, ஜனவரி 16-ஆம் தேதி விடுமுறை நாளாக மாற்றி, உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக 27ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது, 16ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Pongal festival, Ration Shop