Home /News /tamil-nadu /

இனி ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இதுதான்; தமிழக அரசு அதிரடி உத்தரவு

இனி ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இதுதான்; தமிழக அரசு அதிரடி உத்தரவு

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

Ration Shop Time | தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகளும் விடுமுறை நாட்கள் தவிர இதர பணி நாட்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள நேரத்தில் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தி உள்ளது.

    ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வழங்குவதில் நடைபெறும் மோசடியை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரேஷனில் வாங்காத பொருட்களுக்கு வாங்குவதாக குறுஞ்செய்தி வருவதாக பல்வேறு புகார்கள் மக்கள் தரப்பில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை.

    இதன்காரணமாக அவர்கள் பொருள்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்கு தீர்வாக கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில்‌ உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில்‌ உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய கண்காணிப்புடன்‌ தவறாது இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ விநியோகம்‌ செய்யப்பட வேண்டும்‌ என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. . இது தொடர்பாக தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை, ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும். இதரப் பகுதிகளில், காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 6 மணி வரை, நியாய விலைக் கடைகள் இயங்க வேண்டும் என்று 2018-ம் ஆண்டே வேலை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது.

    Also Read : குரூப் 4 தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? TNPSC தலைவர் தகவல்

    மேற்கண்டவாறு நியாய விலை கடைகள் செயல்படும் வேலை நேரம் பெரும்பாலன நியாய விலைக் கடைகளில் பின்பற்றப்படுவதில்லை. மாவட்டங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்து விவரம் பெரும்பாலான கடைப் பணியாளர்களுக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை என்ற விவரம் அறியமுடிகிறது.

    எனவே மாதாந்திர நியாய விலைக் கடை பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்து தெரிவித்து, குறித்த நேரத்தில், நியாய விலைக் கடைகளை திறந்து செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும். மேலும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரத்தை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வகையில் நியாய விலைக் கடையின் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ration card, Ration Shop

    அடுத்த செய்தி