தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Also Read : முதல்வரை ஞாயிற்றுக் கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது என வழக்கு - அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 8ஆம் தேதி நாளை முதல் அனைத்து நியாயவிலை கடைகள் காலை 9 மணி முதல் 12:30 மணி வரையிலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாயவிலைக் கடைகள் இயங்கும் எனவும் இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நியாய விலை கடையில் இந்த நேரத்தில் செயல்படும் எனவும் தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரோனா காலகட்டத்தில் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வந்தன. கொரோனாவிற்கு முன்னர் வழக்கமாக காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.