ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒரே எஸ்எம்எஸ்.. ரேஷன் கடை இருப்பு விவரம் இனி உங்கள் செல்போனில்.. சூப்பர் வசதி அறிமுகம்!

ஒரே எஸ்எம்எஸ்.. ரேஷன் கடை இருப்பு விவரம் இனி உங்கள் செல்போனில்.. சூப்பர் வசதி அறிமுகம்!

ரேஷன் கடை

ரேஷன் கடை

Ration Shop | இனி வீட்டிலிருந்தபடியே ரேஷன் கடை பற்றிய பலத் தகவல்களை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரேஷன் கடையில் வரிசையில் நிற்பது என்பது உண்மையில் நேரத்தையும், உடல் சக்தியையும் விரயம் செய்வது. ஆனாலும் ரேஷன் பொருட்கள் அத்தியாவசியத் தேவை என்பதால் காலம் காலமாக ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நின்று பொருட்களை இன்னும் வாங்கி வருகிறார்கள்.

  முக்கியமாக வீட்டில் உள்ள பெண்மணிகள் பெருமளவில் இதற்கு தங்களது நேரத்தைச் செலவழிக்கிறார்கள். பல நேரம் ரேஷன் கடை வரை சென்று அங்கு தான் வாங்க வேண்டிய பொருள் இல்லை என்பதால் வீடு திரும்பும் நிலையும் ஏற்படும். இதையெல்லாம் போக்க தமிழக அரசு ஒரு வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

  அதில் ரேஷன் கடையில் உள்ள உணவு பொருட்களின் இருப்பை பதிவு செய்த மொபைல் போன் எண்ணில் இருந்து 97739 04050 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்துக் கொள்ளலாம்.

  சில சமயங்களில் தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் இருந்தாலும் சில ஊர்களில் உள்ள ஊழியர்கள் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி, குறைவாக பொருட்கள் வழங்குவதாக புகார் எழுகின்றன.

  எனவே ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு விவரத்தை எளிதாக அறிந்துக் கொள்ள நீங்கள் பதிவு செய்த மொபைல் போனில் இருந்து 97739 04050 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்துக்கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

  Also see... சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நாளை நடைதிறப்பு.. ஆன்லைன் புக்கிங் அவசியம்.. தேவசம்போர்டின் முக்கிய அறிவிப்புகள்!

  இது குறித்து உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் விவரத்தை தெரிந்துக்கொள்ள பிடிஎஸ் என டைப் செய்து இடைவெளி விட்டு 101 என டைப் செய்து 97739 04050 என்ற எண்னுக்கு எஸ் எம் எஸ் அனுப்பலாம். அதே முறையில் பிடிஎஸ் இடைவெளி விட்டு 102 என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பி கடை திறந்துள்ளதா இல்லையா என அறிந்துக் கொள்ளலாம்.

  அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பிடிஎஸ் 107 என டைப் செய்து எஸ்எம்எஸ் வாயிலாக புகார் அனுப்பலாம். எனவே இதுவரை மொபை போன் எண்ணை பதிவு செய்யாதவர்களும் மாற்றிய புதிய எண்ணை அப்டெட் செய்யாதவர்களும் உடனே உணவு வழங்கல் அதிகாரிகளிடன் தெரிவித்து பயன் பெறலாம்” என கூறினார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Mobile phone, Ration Shop