Home /News /tamil-nadu /

ரேஷன் கடை விடுமுறை ரத்து.. பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..

ரேஷன் கடை விடுமுறை ரத்து.. பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

Ration Shop | தமிழகத்தில் வரும் 17ம் தேதியும் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

    தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் பயனடையும் வகையில், தமிழக அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

    தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் (Pongal) பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை, நெய், முழு கரும்பு ஆகியவை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

    Also read: அடேங்கப்பா... புத்தாண்டு வசூலை மிஞ்சிய பொங்கல் டாஸ்மாக் விற்பனை...

    ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை கடந்த 4-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதையடுத்து ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. பொங்கல் தொகுப்பை பெற ரேஷன் கடைகள் முன் மக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று சென்றனர்.

    எனினும், இன்னும் சிலர் பொங்கல் பரிசு தொகுப்பை பெறாமல் உள்ளனர். பொங்கல் பண்டிகை (வெள்ளிக்கிழமை), திருவள்ளுவர் தினம் (சனிக்கிழமை), ஊரடங்கு (ஞாயிற்றுக்கிழமை) என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

    இதனிடையே, தமிழகத்தில் வரும் 17ம் தேதியும் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. 18 ஆம் தேதி தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என்பதால், 17 ஆம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால், வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்தது.

    இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பை பெறாமல் உள்ளவர்களுக்கு ஏதுவாக, திங்கட்கிழமை ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள்-2022 வரும் திங்கட்கிழமை (17.01.2022) அன்று பெற்றுக்கொள்ளலாம்.

    திங்கட்கிழமை நியாய விலைக்கடை விடுமுறை ரத்து செய்யப்பட்டதால் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள்-2022 இதுவரை பெறாதவர்கள் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also read: கன்னியாகுமரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பான வெல்லத்தில் நோயாளிகளுக்கான ஊசி- குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Pongal, Ration card, Ration Shop

    அடுத்த செய்தி