Ration Card | மளிகை தொகுப்பு தொடர்பாக முக்கிய உத்தரவு - ரேஷன் அட்டைதாரர்கள் ஹேப்பி

ரேஷன் கடை

ரேஷன் கார்டு உள்ளவர்களுக்குகொரோனா நிவாரண தொகையுடன் வழங்கப்பட்ட மளிகை தொகுப்பு தரத்தில் புகார் எழுந்ததால் அது தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற உடன் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் (Ration Card) கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கபடும் என்று அறிவித்தார். அதனுடன் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் இலவசமாக கொடுக்கப்படும் என்றார். கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை மே மாதத்தில் வழங்கப்பட்டது.

    கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை மற்றும் 14 வகையான மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று தொடங்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது.

    ஆனால் இந்த மளிகை தொகுப்பு தரம் குறித்து பல புகார்கள் வந்தன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பலருக்கு காலவதியான டீத்தூள் பாக்கெட்கள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர், புதிய டீத்தூள் பாக்கெட்டை மாற்றி ஏற்கனவே கடையில் இருந்த காலாவதியான பாக்கெட்களை விநியோகம் செய்ததாக தெரியவந்தது.

    Also read : நடிகை புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

    இதை தொடர்ந்து ரேஷன் கடைகளில் உள்ள மளிகைப் பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்ய உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவு வழங்கல் துறை அனுப்பி உள்ள சுற்றிக்கையில், ரேஷன் கடைகளில் பணியில் உள்ள பணியாளர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ரேஷனில் விநியோகம் செய்யும் பொருட்கள் கலாவதியாகி இருந்தால் அதனை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். வருங்காலங்களில் இதுப்போன்று நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக செயல்பட வேண்டும், இல்லையென்றால் சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: