Home /News /tamil-nadu /

ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்.. கடைகளை திறக்க அரசு மாற்று ஏற்பாடு

ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்.. கடைகளை திறக்க அரசு மாற்று ஏற்பாடு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Ration shop : இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக நியாய விலைக்கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், பொது மக்களை பாதிக்காத வகையில் மாற்று நடவடிக்கைகளை எடுக்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

    அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 9ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. (No Work No Pay) என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன்படி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Must Read : கறிவிருந்து கச்சேரி.. திருச்சி சிவாவின் தடபுடல் பிறந்தநாள் கொண்டாட்டம் - உள்ளூர் அரசியலுக்கு அஸ்திவாரமா?

    மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்றும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ration Shop, Strike, TN Govt

    அடுத்த செய்தி