• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரேஷன் கடையில் இரண்டாவது தவணையாக ரூ.2000 வழங்கும் தேதி அறிவிப்பு

ரேஷன் கடையில் இரண்டாவது தவணையாக ரூ.2000 வழங்கும் தேதி அறிவிப்பு

ரேஷன் கடை

ரேஷன் கடை

கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் இரண்டாவது தவனையாக ரூ.2000 வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 வழங்கப்படும் என்றும், முதற்கட்டமாக இந்த மாதமே ரூ .2000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி முதல் தவணை மே மாதம் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட்டது. மேலும் முதல் தவணைணை வாங்கிய தவறியவர்கள் ஜூன் மாதம் வாங்கி கொள்ளலாம் என்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து ரேஷன் கடைகளில் 2-வது தவனை ரூ.2000 மற்றும் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் அன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன்படி 2.11 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கோதுமை மாவு- 1 கிலோ, உப்பு- 1 கிலோ, ரவை- 1 கிலோ, சர்க்கரை- 500 கிராம், உளுத்தம் பருப்பு- 500 கிராம், புளி- 250 கிராம், கடலை பருப்பு- 250 கிராம், கடுகு- 100 கிராம், சீரகம்- 100 கிராம், மஞ்சள் தூள்- 100 கிராம், மிளகாய் தூள்- 100 கிராம், குளியல் சோப்பு 25 கிராம் – 1, துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1 ஆகியவை ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட உள்ளது.

    Also Read : இது என்ன துக்ளக் ஆட்சியா? - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டம்

    இந்நிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ 2000 வழங்க ரூ 2,098 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த நிதியை மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகை வரும் ஜூன் 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: