ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷன் பொருட்களை பதுக்கி விற்ற 185 பேர் சிக்கினர்... கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை..

ரேஷன் பொருட்களை பதுக்கி விற்ற 185 பேர் சிக்கினர்... கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை..

மாதிரி படம்

மாதிரி படம்

Ration Rice Seized | கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980ன் படி 2 நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரேஷன் பொருட்களை பதுக்கி விற்ற 185 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசிய பண்டங்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  மேலும் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1955ன் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  இதையும் படிங்க : காரிலும் ஹெல்மெட் போடணுமா...? கோவில்பட்டியில் உள்ளவருக்கு அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அனுப்பிய குறுச்செய்தியால் அதிர்ச்சி!

  அவ்வாறு, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980ன் படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, 24.10.2022 முதல் 30.10.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.4,85,311 மதிப்புள்ள 802 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி மற்றும் மண்ணெண்ணெய் 241 லிட்டர், 33 எரிவாயு உருளை ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 25 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 185 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980ன் படி 2 நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Tamilnadu