Home /News /tamil-nadu /

தடுப்பூசி செலுத்தினால் மட்டும் தான் ரேஷனா? உணவுத்துறை அமைச்சர் விளக்கம்

தடுப்பூசி செலுத்தினால் மட்டும் தான் ரேஷனா? உணவுத்துறை அமைச்சர் விளக்கம்

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே நியாயவிலை கடைகளில் பொருட்கள் வழங்கப்படுமான என்பது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.

    ஒமைக்கரான் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.  தடுப்பூசி ஒமைக்ரான் பரவலை தடுக்காவிட்டாலும் பாதிப்புகளை தள்ளிப்போடும், குறைக்கும் ஆற்றல் கொண்டது என்று தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான விழப்புணர்வை மக்களிடையே அதிகரித்து வருகின்றனர்.

    இதனிடையே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் ரேஷன் கடைகள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர்கள் தடைவிதித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின.

    Also Read : தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம்

    இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் சங்கரபாணி திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி மட்டுமே. அரசு அதுப்போன்ற் எந்த உத்தரவும் விதிக்கவில்லை என்றார்.

    மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடைமுறையில் தான் உள்ளது. மற்ற மாநிலத்தை சேர்ந்த மக்கள் குறிப்பிட்ட நியாய விலை கடையில் பொருட்கள் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் 39000 மெட்ரிக் டன் நெல் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் உள்ளது. அவற்றை உடனடியாக அரவைக்கு எடுக்கும்படி அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். பயோமெட்ரிக் முறை மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம். தமிழகத்தில் 97% பயோமெட்ரிக் முறை பயன்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டைவிட 3லட்சம் மெட்ரிக் டன் குறுவை நெல் கூடுதலாக டெல்டாவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Corona Vaccine, Ration card

    அடுத்த செய்தி