ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புதிய ரேஷன் கார்டு நாளை முதல் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

புதிய ரேஷன் கார்டு நாளை முதல் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவைக்கு நாளைக்கு முதல் அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

  கொரோனா தொற்று காரணமாக புதிய ரேஷன் அட்டை விண்ணப்பங்கள் தேக்கம் அடைந்தன. கொரோனா தொற்றின் காரணமாக விசாரணை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள முடியாத சூழல் நிலவியதால்  தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இந்நிலயில் நாளை முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவைக்கு அனுமதி அளிக்கப்படும் என தமிழக அறிவித்துள்ளது

  இதுதொடர்பாக வெளியான அறிக்கையில்,  கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4000  இரு தவணைகளில் ரூ.2000 வீதம் மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டது. மேலும் ஜூன் மாதத்தில் நிவாரணத் தொகை ரூ.2000 உடன் 14 மளிகைப் பொருட்கள் வழங்கவும் ஆணையிடப்பட்டது. இதனைப் பெற நியாய விலை கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மனுக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், புதிய மனுக்களை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  தற்போது நிவாரண உதவித் தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால், 01.07.2021 முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் படிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Corona, MKStalin, Ration, Ration card, Ration Shop, Tamilnadu