Home /News /tamil-nadu /

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு... மாற்றம், திருத்தம் செய்யணுமா? - இன்றே வாய்ப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு... மாற்றம், திருத்தம் செய்யணுமா? - இன்றே வாய்ப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Ration Card Camp | சென்னையில் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலங்களில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய ரேஷன் கார்டு குறைதீர் முகாம் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறுகின்றது.

    மே மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் இன்று நடைபெறுகின்றது.

    சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று மே மாதத்திற்கான ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்றுகாலை 10.00 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் பிற்பகல் 1.00 மணி வரை இந்த குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பெற ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். இப்போது ஸ்மார்ட் கார்டாக அதன் வடிவம் மாறிவிட்டது. அதை பெறுவதும் ஈஸி தான். ஒரு குடும்பத்திற்கு ஒரு ரேஷன் கார்டு, அப்ளை செய்த பிறகு முறைப்படி அரசு அதிகாரிகள் வீட்டுக்கு வந்து தகவல்களை, இருப்பிடங்களை உறுதி செய்த பின்னர் ரேஷன் அட்டை வழங்குவார்கள். இதற்கு 3 - 5 மாதங்கள் வரை ஆகி வந்த நிலையில் தற்போது அனைத்து ஆன்லைன் மூலம் மாற்றப்பட்டுள்ளதால் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் கிடைக்கும்படி வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றுவது உள்ளிட்ட அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது தொடர்பான ஏதாவது புகார் இருந்தாலும் தொலைபேசி அல்லது ஆன்லைன் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடும்ப அட்டைகளில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்த முகாம் இன்று காலை 10 மணி முதல் சென்னையில் தொடங்கியது . அதன்படி ரேஷன் கார்டுகளில் ஏதாவது மாற்றம் செய்ய விரும்புவர்கள் இன்று நடைபெற உள்ள முகாமில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ALSO READ |  ராஜீவ்காந்தி படுகொலைக்கு நீதி கேட்டு மரத்தில் தலைகீழாக தொங்கி காங்கிரஸ் நிர்வாகி நூதனப்போராட்டம்

    சென்னையில் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலங்களில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய ரேஷன் கார்டு குறைதீர் முகாம் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறுகின்றது.  இதில் உங்கள் ரேஷன் கார்டு குறித்த குறைகளுக்கு தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இந்த முகாமை குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Ration card

    அடுத்த செய்தி